தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

விற்பனைக்கு வந்த சேகுவேராவின் வீடு! - சேகுவேரா

புவெனஸ் ஐரிஸ் (அர்ஜென்டினா): ரொசாரியோவில் உள்ள சேகுவேராவின் வீடு விற்பனைக்கு வந்துள்ளது.

சேகுவேரா
சேகுவேரா

By

Published : Jul 17, 2020, 10:35 PM IST

கியூபா விடுதலைக்காகப் போராடிய முக்கியத் தலைவர்களுள் முதன்மையானவர், சேகுவேரா. எங்கெல்லாம் ஏகாதிபத்தியம் இருக்கிறதோ அங்கெல்லாம் அதற்கு எதிராக சேவின் கால்கள் பயணித்தன.

இந்நிலையில் அர்ஜென்டினா நாட்டில் உள்ள ரொசாரியோவில் உள்ள சேகுவேராவின் வீடு, தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. 4 லட்சம் டாலருக்கு(ரூ.2 கோடியே 99 லட்சத்து 74 ஆயிரத்து 220) இந்த வீடு விற்பனை செய்ய உள்ளதாக, வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, கரோனா ஊரடங்கு காரணமாக, வீட்டை விரைவாக விற்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே இந்த வீடு 15 பேரிடம் கை மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details