விசித்திரமான மக்களுக்காகவே விசித்திர சேலஞ்ச் பிரபலம் அடைந்து வருகிறது. சமீப காலங்களாக சமூக வலை தளங்களில் ஓடும் காரிலிருந்து இறங்குவது, பாட்டில் மூடியை காலால் தொடுவது போன்ற பல வகையான சேலஞ்சுகள் ஹிட் அடித்து வருகின்றன. அந்த வரிசையில், தற்போது உடலில் ஒட்டிக்கொள்ளும் நாற்காலி சேலஞ்ச் வைரலாகியுள்ளது.
அதில், முதலில் சுவரிலிருந்து மூன்று அடித் தள்ளி நிற்க வேண்டும். பிறகு 90 டிகிரி கோணத்தில் தலையை சுவரைத் தொடும்படி குனிய வேண்டும். பின்னர் அவர்கள் தங்கள் பக்கத்தில் வைத்திருந்த நாற்காலியை இழுத்து அதை மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியோடு வைத்து, அணைத்தபடி கைகளை விட்டு நிற்க வேண்டும். அப்படி அந்த நாற்காலி, உடலுடன் ஒட்டி எந்த பிடிமானமும் இல்லாமல் நின்றால், சேலஞ்சில் வென்றதாக அர்த்தம்.