தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கனடா பிரதமர் மனைவிக்கு கொரோனா: உறுதி செய்த மருத்துவர்கள் - கனடா பிரதமர் மனைவி

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Justin Trudeau
Justin Trudeau

By

Published : Mar 13, 2020, 8:12 AM IST

Updated : Mar 13, 2020, 8:50 AM IST

கோவிட் - 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றானது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய இந்த வகை வைரஸானது உலகம் முழுவதும் தற்போது வரை 4,700க்கும் மேற்பட்ட உயிர்களைக் காவு வாங்கியுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் காணப்பட்ட கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி ஸோஃபி ஜார்ஜ் ட்ரூடோவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, மனைவிக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாகவும், வீட்டில் இருந்தபடி அலுவலக பணிகளை கவனிக்க இருப்பதாகவும் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்திருந்த நிலையில், இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் தம்பதியினர் தங்களின் குழந்தைகளுடன் இந்தியா வந்திருந்தபோது, மக்களின் மனதை வெகுவாகக் கவர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Mar 13, 2020, 8:50 AM IST

ABOUT THE AUTHOR

...view details