உலகம் முழுவதும் கோவிட்-19 தடுப்பூசிகள் செலுத்துவது மும்முரமாக நடைபெற்றுவருகிறது. அமெரிக்காவின் அண்டை நாடான கனடாவில் அஸ்ட்ரா செனெக்கா தடுப்பூசி பயன்படுத்தப்பட்டுவரும் நிலையில், இந்தத் தடுப்பூசிக்கு அந்நாடு திடீர் கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது.
55 வயதுக்கும் குறைவான நபர்களுக்கு அஸ்ட்ரா செனெக்கா தடுப்பூசி செலுத்துவதை நிறுத்த வேண்டும் என அந்நாட்டின் தடுப்பூசி ஆலோசனை குழு பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரையை அமல்படுத்துவது குறித்து மாகாண அரசுகள் ஆலோசித்துவருகின்றன.