தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

மனைவிக்கு கொரோனா அறிகுறி: கனடா பிரதமர் வீட்டிலிருந்து வேலை செய்ய முடிவு - ஜஸ்டின் ரூடோ

மனைவிக்கு கொரோனா தொற்று அறிகுறி தென்பட்டதையடுத்து மனைவியிடமிருந்து தனிமைப்பட்டும் வீட்டிலிருந்தே அலுவல் பணிகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

canada pm coronavirus  trudeau work from home  trudeau wife coronavirus  canada pm wife  ஜஸ்டின் ரூடோ  கனடா நாட்டுப்பிரதமர் ஜஸ்டின் ரூடோ
கனடா பிரதமரின் மனைவிக்கு கொரோனா தொற்று அறிகுறி

By

Published : Mar 13, 2020, 7:25 AM IST

மனைவிக்கு கொரோனா தொற்று அறிகுறி தென்பட்டதையடுத்து தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொள்வதாக கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

தனது மனைவி சோபி பிரிட்டன் சென்றுவிட்டு திரும்பும்போது உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் வீட்டிலிருந்தே தொலைபேசி அழைப்புகள், விளக்கங்கள் மெய்நிகர் கூட்டங்களில் பங்குபெறுவார் எனவும் பிரதமர் அலுவலகத்திலிருந்து வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், ஒட்டாவாவில் கனடாவின் மாகாண மற்றும் பிராந்திய தலைவர்களுடனான சந்திப்பையும் ட்ரூடோ ரத்து செய்துள்ளார்.

இதையும் படிங்க:கொரோனா பாதிப்பு: மனித உரிமைகள் ஆணைய அமர்வு நிறுத்தம்!

ABOUT THE AUTHOR

...view details