பெண் போலீஸ்
அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஆம்பர் கெய்ஜர். 32 வயதான இந்த பெண்மணி, அமெரிக்க காவல்துறையில் உயரதிகாரியாக பணிபுரிந்து வந்தார். இவர் ஒருநாள் தன் வழக்கமான பணிகளை முடித்துக்கொண்டு வீடு திரும்புகையில் வீட்டின் சோபாவில் இளைஞர் ஒருவர் அமர்ந்திருந்தார்.
சுட்டுக் கொலை
இதையடுத்து அந்த இளைஞருக்கும், பெண் போலீசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரம் அடைந்த ஆம்பர், தன்கையில் இருந்த துப்பாக்கியால் இளைஞரை நோக்கிச் சுட்டார். இதில் சுருண்டு விழுந்த அந்த இளைஞர், ரத்த வெள்ளத்தில் மரித்தார். அதன்பின், 7 நாட்கள் நடந்த போலீஸ் விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியானது.
விசாரணை
அதில், கொலையுண்ட இளைஞர் கரீபியன் தீவைச் சேர்ந்த போதம் ஜீன் (26) என்பதும், அமெரிக்காவில் கணக்கர் வேலை பார்த்துவந்ததும் தெரியவந்தது. அவர் மீது எந்த குற்றமும் இல்லை. ஆம்பர் குடியிருந்த அதே குடியிருப்பில் தான் போதம் ஜீனும் வசித்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
கடந்த ஆண்டு (2018) செப்டம்பர் 6ஆம் தேதி இரவு நடந்த இக்கொலை, ஆம்பருக்கு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியது. இனவெறியின் அடிப்படையில் ஆம்பர் இவ்வாறு நடந்து கொண்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் ஆம்பர் காவல் துறையில் இருந்து நீக்கப்பட்டார்.
மனஉளைச்சல்
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஆம்பர் தரப்பில் பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்டது. ஆம்பரை, சக காவலர் ஒருவர் பாலியல் ரீதியாக அபகரிக்க முயற்சித்துள்ளார். இதற்கு ஆம்பர் உடன்படாததால் அவரை மிரட்டி வந்துள்ளார். இதனால் ஆம்பர் மன உளைச்சலில் இருந்ததாகவும், அதன் தாக்கம் காரணமாகவே அன்று இரவு அவ்வாறு நடந்து கொண்டதாகவும் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
10 ஆண்டுகள் சிறை
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஆம்பருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் நீதிமன்றத்துக்கும் போதமின் சகோதர் வந்திருந்தார். அவரும் நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கேட்டு கண்கலங்கினார். இதற்கிடையில் அங்கிருந்து எழுந்து வந்த ஆம்பர், போதமின் சகோதரனைக் கட்டிப்பிடித்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களின் கண்களையும் கலங்க செய்தது.
இதையும் படிங்க:
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி காவல் அலுவலர் சுட்டுக் கொலை!