தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அமெரிக்கா: தேர்தல் பரப்புரையின் கடைசி நாள்! - கரோனா சூழல்

என் கைகளில் அதிகாரம் வந்தால்தான் அமெரிக்காவின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பதே ட்ரம்ப், பிடன் பரப்புரையில் உள்ள பொதுவான அம்சம் ஆகும்.

US presidential campaign enters final day
US presidential campaign enters final day

By

Published : Nov 2, 2020, 3:25 PM IST

பிலடெல்பியா: அதிபர் ட்ரம்புக்கும், அவரை எதிர்த்து போட்டியிடும் ஜோ பிடனுக்கும் இன்றே கடைசி நாள் பரப்புரை ஆகும். கரோனா சூழலில் நாளை அமெரிக்க தேர்தல் நடைபெறவுள்ளது.

அமெரிக்க தேர்தலுக்கு முன்கூட்டியே வாக்களிக்கும் முறையை பயன்படுத்தி இது 9 கோடிக்கும் அதிகமானோர் வாக்களித்துள்ளனர். ட்ரம்பும், ஜோ பிடனும் வாக்காளர்களை ஈர்க்க முயற்சித்து வருகின்றனர்.

தேர்தல் பரப்புரையின் கடைசி நாளான இன்று, வடக்கு கலிபோர்னியாவில் இருந்து விஸ்கான்சின் வரை ஐந்து பேரணிகளில் ட்ரம்ப் கலந்துகொள்கிறார். ட்ரம்ப் அதிபராக முக்கிய காரணமாய் இருந்த மாகாணங்களான பென்சில்வேனியா, ஒஹியோ ஆகிய இடங்களில் ஜோ பிடன் கவனம் செலுத்தி வருகிறார். ட்ரம்பும், பிடனும் ஒருவரை ஒருவர் சாடி பரப்புரை செய்து வருகின்றனர். என் கைகளில் அதிகாரம் வந்தால்தான் அமெரிக்காவின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பதே இருவரின் பரப்புரையிலும் உள்ள பொதுவான அம்சம் ஆகும்.

இதையும் படிங்க:அமெரிக்க தேர்தல்: இறுதிகட்ட கருத்துக்கணிப்பு கூறுவது என்ன?

ABOUT THE AUTHOR

...view details