அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ சிறிது நேரத்தில் மளமளவென பரவியது. இதனால் வடக்கு கலிஃபோர்னியா பகுதிகளில் வசித்துவந்த மக்கள் ஏராளமானோர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
இது குறித்து அம்மாகாண ஆளுநர் காவின் நியூசோம், ''மின்னல்கள் தாக்கியதன் விளைவாக நாம் அசாதாரணமான சூழல்களை எதிர்கொண்டுள்ளோம். கடந்த 72 மணி நேரத்தில் மட்டும் 11 ஆயிரம் மின்னல்கள் தாக்கியுள்ளன. இதனால் 367 இடங்களில் காட்டுத்தீ பரவியுள்ளது'' என்றார்.
வடக்கு, கிழக்கு, தெற்கில் எரியும் காட்டுத்தீயால் சூழப்பட்ட சான் பிரான்சிஸ்கோவில் சாம்பலும் புகையும் காற்றில் பரவியுள்ளன. இதனால் சான் பிரான்சிஸ்கோ - சாக்ரிமெண்டோ பகுதிகளுக்கு நடுவே வசித்துவந்த லட்சக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.