அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணம், ஃபிரெஸ்னோ என்ற நகரில் உள்ள ஒரு வீட்டின் கொல்லைப்புறத்தில் நேற்று இரவு (உள்ளூர் நேரப்படி) குடும்ப விருந்து நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான விருந்தினர்கள் கலந்துகொண்டனர். இதனிடையே, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் விருந்தினர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இதில், நான்கு பேர் உயிரிழந்தனர், ஆறு பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினார். தொடர்ந்து அந்தப் பகுதியைச் சுற்றி வளையம் அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.