அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பாஸ்கோ ரோ என்ற நகரில் காவல் நிலையத்தை நோக்கி நேற்று இரவு (உள்ளூர் நேரம்) அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
இதனிடையே, அந்த நபரைப் பிடிக்கும் நோக்கில் காவல் துறை உயர் அலுவலர் ஒருவர் காவல் நிலையத்திலிருந்து வெளியேறி துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவருக்கு தலையில் குண்டடிபட்டு கீழே சரிந்தார்.
இதைக் கண்ட இன்னொரு காவலர் அவரை மீட்டு பாதுகாப்பான இடத்தில் படுக்கவைத்துவிட்டு, குற்றவாளியுடன் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டார். சிறிது நேரம் நீடித்த இந்த மோதலை அடுத்து, குற்றவாளி சம்பவ இடத்தை விட்டுத் தப்பியோடிவிட்டார்.