பொதுவாக விலங்குகளின் ரோமங்களைச் சேகரித்து அதிலிருந்து உடைகள், காலணிகள், கைப்பைகள் போன்றவை தயாரிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் இதுபோல ரோமங்கள் எடுக்கப்படுவதால், விலங்குகள் பெரும் இன்னல்களைச் சந்திப்பதாகவும், இதனால் அவைகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் பலரும் போராடிவருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் விலங்குகளின் ரோமங்களிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் தடை செய்யப்படுவதாக கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசோம் அறிவித்துள்ளார். இந்த தடை வரும் 2023ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வரவுள்ளது.