அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட மெக்டொனால்டு உணவகம் உலகம் முழுவதும் தனது கிளைகளை வைத்துள்ளது. உலகின் பொதுவான உணவுகளில் ஒன்றான பர்கர், இந்நிறுவனத்தின் பிரதான உணவு எனலாம். பர்கர்கள் ஒன்றுதான் ஆனால் நாட்டின் சுவைக்கேற்ப அதன் மூலப்பொருட்கள் மாற்றப்படும். அதனால் மக்கள் அதனை விரும்பி சுவைக்கின்றனர். அப்படி பர்கரை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம், அது ஒருபுறமிருக்க கோல்டன் ஆர்ச்ஸ் அன்லிமிடெட் (Golden Arches Unlimited) என்ற வலைதளம், மெக்டொனால்டு பர்கர் மெழுகுவர்த்திகள் என 6 வகையான மெழுகுவர்த்திகளை விற்பனை செய்கிறது.
பற்றவைத்தால் பர்கர் வாசனை: மெக்டொனால்டின் புதிய யுக்தி - கோல்டன் ஆர்ச்ஸ் அன்லிமிடெட்
நியூயார்க்: கோல்டன் ஆர்ச்ஸ் அன்லிமிடெட் என்ற வலைதளம் மெக்டொனால்டு நிறுவன பர்கர் மெழுகுவர்த்திகளை விற்பனை செய்கிறது. அதை பற்றவைத்தால் வீடு முழுவதும் பர்கர் வாசனை வீசும் என ஆர்வத்தை தூண்டியுள்ளது.
mcdonald
அதில் பன், கெட்ச்அப், ஊறுகாய், சீஸ், வெங்காயம், இறைச்சி அடங்கும். இதுகுறித்து அந்நிறுவனம், ஆறுவகையான மெழுகுவர்த்திகளை வாடிக்கையாளர்கள் வாங்கி வீடுகளில் பற்றவைத்தால் உங்கள் வீடு பர்கர் போல மணக்கும். கலோரிகள் அல்லாத பர்கரை சுவையுங்கள் எனத் தெரிவித்துள்ளது. மேலும் அந்நிறுவனம் அதன் விற்பனை விரைவில் முடியும் எனவும் அறிவித்துள்ளது. ஆனால் இதுகுறித்து மெக்டொனால்டு நிறுவனம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இதையும் படிங்க:இந்தியாவுக்குப் புறப்பட்ட ட்ரம்ப்!