பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஹவாய் தீவுகளில் ஒன்று மாவ். இங்கு, வெப்ப சலனம் காரணமாக புதர் ஒன்றில் தீப்பற்றியுள்ளது. நேரம் செல்ல செல்ல அருகில் இருந்த புதர்களிலும் தீ பரவி காட்டுத் தீ போல் உருவெடுத்துள்ளது. இதனால், வானமே கரும்புகையால் சூழப்பட்டது.
ஹவாய் புதரில் பயங்கர தீவிபத்து... மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்! - mauii
ஹவாய்: ஹவாயின் மாவ் என்ற தீவில் உள்ள புதரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக, அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
hawaii
இதையடுத்து, அசம்பாவிதம் ஏதும் நடிந்திராமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, தீயணைப்பு பணி தொடங்கப்பட்டது. காற்றில் வேகம் அதிகமாக இருந்ததால் ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது.இதையடுத்து, தீயின் தன்மை சற்று குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.