பிரிக்ஸ் நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற வருடாந்திர கூட்டம் ரஷ்யா தலைமையில் ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று நடைபெற்றது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், "பயங்கரவாதத்தை எந்த வடிவத்தில் யார் எங்கு வெளிப்படுத்தினாலும் அது கண்டிக்கத்தக்க ஒன்று. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடத் தெளிவான ஒரு அணுகுமுறை விரைவில் உருவாக்கப்பட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சர்வதேச விதிகளின்படியும் ஐநாவின் வழிகாட்டுதலுக்கு இணங்கவும் பயங்கரவாதத்தை எதிர்க்க ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு, பொருளாதாரம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.