தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பிரேசில் அதிபரைத் தொடர்ந்து அவரது மனைவிக்கும் கரோனா! - மைக்கேல் போல்சனாரோவுக்கு கரோனா

பிரசிலியா: பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோவைத் தொடர்ந்து அவரது மனைவி மைக்கேல் போல்சனாரோவுக்கும் தற்போது கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Brazil's first lady tests positive for COVID-19
Brazil's first lady tests positive for COVID-19

By

Published : Jul 31, 2020, 7:42 PM IST

கரோனா தொற்றால் மிகவும் மோசமாக பாதித்த நாடுகளின் பட்டியலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் பிரேசில் நாட்டில் 58 ஆயிரம் பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டது.

அந்நாட்டில் இதுவரை 26 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அவர்களில் 91 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கரோனா பாதிப்பை அந்நாட்டின் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ முறையாக கையாளவில்லை என்று அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது.

இந்நிலையில், கடந்த மாதம் 7ஆம் தேதி ஜெயிர் போல்சனரோவுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், கடந்த சனிக்கிழைமை கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார். அவருடன் சேர்ந்து இன்னும் சில அமைச்சர்களுக்கும் கோவிட்-19 உறுதி செய்யப்பட்டது.

இந்தச் சூழலில் பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோவின் மனைவி மைக்கேல் போல்சனாரோவுக்கு நேற்று நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள மைக்கேல் போல்சனாரோ நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார் என்றும் முறையான மருத்துவ நடைமுறைகள் பின்பற்றப்படும் என்றும் அதிபர் அலுவலகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

அதேபோல பிரேசிலின் தொழில்நுட்ப துறை அமைச்சர் மார்கோஸ் பொன்டெஸூக்கும் கரோனா தொற்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. மார்கோஸ் பொன்டெஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் நன்றாக இருக்கிறேன். சளி மற்றும் தலைவலி ஆகிய சில அறிகுறிகள் உள்ளன. இப்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். எல்லாம் விரைவில் சரியாகிவிடும்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மூழ்கும் அமெரிக்க பொருளாதாரம்!

ABOUT THE AUTHOR

...view details