தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இரண்டாவது பரிசோதனையிலும் பிரேசில் அதிபருக்கு கரோனா உறுதி - உலக சுகாதார அமைப்பு கரோனா பாதிப்பு

பிரேசிலியா: பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு இரண்டாவது பரிசோதனையிலும் கரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Brazil
Brazil

By

Published : Jul 16, 2020, 7:22 PM IST

சர்வதேச அளவில் கரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

அந்நாட்டில் இதுவரை 20 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில், சுமார் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா பாதிப்பின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

கரோனா பாதிப்பைக் கையாண்ட விதம் குறித்து அந்நாட்டின் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ மீது கடும் விமர்சனம் எழுந்துவந்த நிலையில், அவரே கடந்த 7ஆம் தேதி கரோனாவால் பாதிக்கப்பட்டார். வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு ஒரு வாரம் தாண்டியுள்ளதால் அவருக்கு இரண்டாவது முறையாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனை முடிவில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இன்னும் சில நாள்களில் தான் மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்போவதாகவும், வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டுவந்து விரைவில் தனது பணிகளை மேற்கொள்வேன் எனவும் அதிபர் போல்சனாரோ தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:கொலராடோவில் உள்ள அணிலுக்கு புபோனிக் பிளேக் தொற்று!

ABOUT THE AUTHOR

...view details