உலகின் மிகப் பெரிய மலைக்காடு 'அமேசான்'. தென் அமெரிக்காவில் உள்ள பிரேசில், பெரு, கொலம்பியா, வெனிசுவேலா, இக்வடார், பொலிவியா, கையானா, சுரிநாம் உள்ளிட்ட நாடுகளில் அமேசான் பரவியுள்ளது. அமேசானின் பெரும்பாலான பகுதி பிரேசில் நாட்டில்தான் அமைந்துள்ளது. இங்கு வருடம் தோறும் காட்டுத் தீ சம்பவங்கள் ஏற்படுவது வழக்கமே.
இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக அமேசானில் பயங்கர காட்டுத் தீ பரவிவருகிறது. முந்தைய ஆண்டுகளைவிட மிக அதிக அளவில் பரவிவரும் இந்த காட்டுத் தீயில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் எரிந்து நாசமாகின. இதனைக் கட்டுப்படுத்த பிரேசில் மெத்தனம் காட்டிவருவதாக உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அத்துடன், காட்டுத் தீயை அணைப்பது குறித்து பிரேசில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தென் அமெரிக்க நாடுகளுடனான வணிக ஒப்பந்தத்தைத் துண்டித்துவிடுவோம் என ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை விடுத்திருந்தது.