தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கரோனா: பிரேசிலில் 3 லட்சத்தைக் கடந்த உயிரிழப்பு - covid 19

பிரேசில்: கரோனா தீநுண்மி தொற்றால் உயரிழந்தோரின் எண்ணிக்கையில் உலக அளவில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

corona virus
கரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையில் பிரேசில் 2வது நாடாக உள்ளது

By

Published : Mar 25, 2021, 10:08 PM IST

உலக அளவில் கரோனாவின் தாக்கம் நீடித்துக்கொண்டேவருகிறது. இந்தியாவில் இதன் பாதிப்பு நாளொன்றுக்கு தற்போது 50 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
கரோனா பாதிப்பிலும் உயிரிழப்பிலும் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் நீடித்துவருகிறது. அங்கு மொத்த பாதிப்பு மூன்று கோடியாகும்.
இதையடுத்து இரண்டாம் இடத்தில் பிரேசில் உள்ளது. அங்கு மொத்த பாதிப்பு ஒரு கோடியே 22 லட்சம். இதுவரை அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை மூன்று லட்சத்தைக் கடந்துள்ளது.

மார்ச் 24 அன்று, பிரேசிலில் 3,251 பேர் கரோனா தொற்றால் இறந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 75 நாள்களில் மட்டும் ஒரு லட்சம் பேர் அந்நாட்டில் இறந்துள்ளனர்.

கரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை உரிய வகையில் பின்பற்றாததாலேயே இவ்வளவு பாதிப்புக்கு காரணம் என அந்நாட்டு சுகாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: கடந்த 12 நாள்களில் 135% அதிகரித்த கரோனா!

ABOUT THE AUTHOR

...view details