தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கரோனா பாதிப்பு எண்ணிக்கையை நீக்கிய பிரேசில்! - பிரேசில் அரசு

பிரேசிலியா: பிரேசில் அரசு தனது அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து கரோனா பாதிப்பு எண்ணிக்கையை நீக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா
கரோனா

By

Published : Jun 7, 2020, 6:24 PM IST

பல உலக நாடுகள் கரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிவருகின்றன. குறிப்பாக, பிரேசில் நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதனால் உலகளவில் கரோனாவால் அதிகம் பாதித்த நாடுகளில் பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில், பிரேசில் சுகாதாரத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. தற்போது, அந்த இணையதளத்தில் நேற்று பதிவான 27 ஆயிரம் கரோனா பாதிப்பு எண்ணிக்கை மட்டுமே உள்ளது. இந்த நீக்கத்திற்கான காரணங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

பிரேசிலில் தொடர்ச்சியாக நான்கு நாள்களாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியதையடுத்தே, மேற்குறிப்பிட்ட தரவுகள் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details