பிரேசில் நாட்டின் கரோனா நிலவரம் குறித்து அந்நாட்டின் 200 முன்னணி பொருளாதார நிபுணர்கள் அந்நாட்டு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், ”தென் அமெரிக்க கண்டத்தின் மிகப்பெரிய நாடான பிரேசில், மிகமோசமான சூழலை எதிர்கொண்டு வருகிறது.
பிரேசில் நாட்டில் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், சமூக அளவிலும் இதன் தாக்கம் ஆழமாகப் பரவியுள்ளது. அரசு இதற்கு முறையான நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இந்தப் பெருந்தொற்றை தடுக்க முடியாது. எனவே, அரசு உடனடியாக லாக் டவுன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளனர்.