தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானத்தின் உற்பத்தி தற்காலிகமாக குறைப்பு! - கோர விபத்து

வாஷிங்டன்: கடந்த ஐந்து மாதங்களில் இரண்டு கோர விபத்தை போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் சந்தித்த நிலையில், அதன் உற்பத்தியை தற்காலிகமாக குறைத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம்

By

Published : Apr 6, 2019, 5:51 PM IST

எத்தியோப்பியாவில் கடந்த மார்ச் மாதம் 10ஆம் தேதி போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 35 நாடுகளைச் சேர்ந்த 157 பேர் பலியாகினர். அதே போன்று கடந்தாண்டு அக்டோபர் மாதம் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட விபத்தில் 189 பேர் உயிரிழந்தனர். இந்த இரண்டு கோர விபத்துக்கள் உலகளவில் பெரும் தாக்கத்தை உருவாக்கியதோடு போயிங் ரக விமானத்தின் பாதுகாப்பு மீது கேள்வி எழுந்தது.

இதனையடுத்து பல்வேறு நாடுகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமான சேவையை தற்காலிகமாக ரத்து செய்தது. இந்தோனேஷியா ஏர்லைன்ஸ் போயிங் நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தையும் ரத்து செய்தது.

இதற்கிடையே, இந்த விபத்து குறித்த சர்வதேச விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், போயிங் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டென்னிஸ் மிலன்பர்க் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "ஒரு மாதத்தில் 52 விமானங்கள் உற்பத்தி செய்யப்படும் நிலையில், தற்போது தற்காலிகமாக 42 ஆக குறைக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

மேலும், போயிங் 737 மேக்ஸ ரக விமானங்கள் விபத்துக்குள்ளாகி உயிரிழப்பு ஏற்பட்டதற்கு, நிறுவனம் சார்பில் மன்னிப்பு கோருவதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் நேற்று முன்தினம் வெளியிட்ட மன்னிப்பு கடிதத்தில் டென்னில் மிலன்பர்க் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details