தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இந்தியாவிற்கு 2,200 புதிய விமானங்கள் தேவைப்படும் - போயிங் நிறுவனம்

வாசிங்டன்: இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து 2022ஆம் ஆண்டின் 2ஆம் பாதியில் இயல்பு நிலைக்கு திரும்பும் எனவும், அதன்காரணமாக அடுத்த 20 ஆண்டுகளில் 2,200 புதிய விமானங்கள் தேவைப்படும் எனவும் விமான உற்பத்தி நிறுவனமான போயிங் தெரிவித்துள்ளது.

boeing-forecasts-air-travel-recovery-in-india-by-2022
boeing-forecasts-air-travel-recovery-in-india-by-2022

By

Published : Apr 8, 2021, 10:10 AM IST

2,200 புதிய விமானங்கள்

இதுகுறித்து டேவிட் ஷுல்ட்(போயிங் வணிக விமானங்கள் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல்) கூறுகையில், கரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து 2022ஆம் ஆண்டின் 2ஆம் பாதியில் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளது. முறையே 2030க்குள் பயணிகள் போக்குவரத்து இரட்டிப்பாகும்.

அதன்காரணமாக , இந்தியாவிற்கு அடுத்த 20 ஆண்டுகளில் 2,200 புதிய விமானங்கள் தேவைப்படும். அதற்காக 90,000 புதிய விமானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் கேபின் குழு ஊழியர்கள் தேவைப்படுவார்கள்" எனத் தெரிவித்தார்.

போயிங் நிறுவனம்

அமெரிக்காவின் போயிங் நிறுவனம் விமானங்கள், விமான பாதுகாப்பு தளவாடங்கள் உள்ளிட்டவை தயாரிக்கிறது. போயிங் நிறுவனத்தால் 2019ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட '737 மேக்ஸ்' ரக விமானங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்தோனிசியா, எத்தியோப்பியா நாடுகளில் 300க்கும் அதிகமான பயணிகள் உயிரிழந்தனர்.

அதன்காரணமாக 737 மேக்ஸ் ரக விமானங்கள் பறப்பதற்கு ஐரோப்பியா, பிரிட்டன், இந்தியா, சீனா, எத்தியோப்பியா, சிங்கப்பூர், அரபு அமீரகம், கனடா உள்ளிட்ட நாடுகள் தற்காலிக தடை விதித்தன. அதன்படி, கடந்தாண்டு மார்ச் மாதம் 18ஆம் தேதி இந்த விமானங்கள் அனைத்தும் தரையிறக்கப்பட்டன.

அதைத்தொடர்ந்து இன்று(ஏப்.8) மேக்ஸ் ரக விமானங்களை மீண்டும் இயக்க 20 விமான நிறுவனங்கள் அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் இந்த விமானங்களை ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. ஆனால், சிவில் ஏவியேஷன் இயக்குநரகம்(Directorate General of Civil Aviation) மேக்ஸ் ரக விமானங்கள் பறக்க அனுமதி வழங்கவில்லை. மேலும், 2020ஆம் ஆண்டில் இந்திய உள்நாட்டு விமான சேவை 55 விழுக்காடு சரிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:முதல்முறையாக புதிய போயிங் ரக விமானத்தில் பயணம்செய்த மோடி

ABOUT THE AUTHOR

...view details