அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் காவல் துறையினர் தனது ட்விட்டர் பக்கத்தில், பி.எம்.டபிள்யூ கார் மீது அதிவேகமாக வந்த ரயில் மோதிய சிசிடிவி காட்சியைப் பகிர்ந்துள்ளனர். அந்தப் பதிவில், "வாகன ஓட்டுநர்கள் தயவுசெய்து ரயில் தண்டாவாளங்கள் இருக்கும் இடங்கிலில் கூடுதல் கவனமாக இருங்கள். இந்த ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர்பிழைத்துவிட்டார்" எனப் பதிவிட்டிருந்தனர்.
பி.எம்.டபிள்யூ கார் மீது மோதிய அதிவேக ரயில் - பதறவைக்கும் சிசிடிவி காட்சி - Driver Escapes Miraculously after train hit car video
கலிபோர்னியா: பி.எம்.டபிள்யூ கார் மீது அதிவேக ரயில் மோதும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
![பி.எம்.டபிள்யூ கார் மீது மோதிய அதிவேக ரயில் - பதறவைக்கும் சிசிடிவி காட்சி சிசிடிவி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6313460-thumbnail-3x2-dasda.jpg)
சிசிடிவி
இதுகுறித்து விசாரிக்கையில், இந்த விபத்தானது மார்ச் 3ஆம் தேதியன்று லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியின் 55ஆவது தெரு - லாங் பீச் அவென்யூ சந்திக்கும் பகுதியில் நடந்துள்ளது தெரியவந்தது. தற்போது, இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க:எரிமலை மீது வயரில் நடந்த துணிச்சல் நபர்!