வாஷிங்டன்:எகிப்து முன்னெடுத்த போர்நிறுத்தத்தை ஹமாஸ், இஸ்ரேல் தரப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால், 11 நாள்கள் நீடித்துவந்த மோதல், முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில், விரைவில் மத்தியக் கிழக்குக்குச் சென்று இஸ்ரேல் - பாலஸ்தீனத் தரப்பு தலைமையை சந்திக்கவிருப்பதாக அமெரிக்காவில் பாதுகாப்புச் செயலர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய, பாலஸ்தீனிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் - ஆண்டனி பிளிங்கன்
எகிப்து முன்னெடுத்த நிபந்தனையற்ற போர் நிறுத்தத்தை இஸ்ரேல், ஹமாஸ் தரப்பு ஏற்றுக்கொண்டுள்ள சூழ்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், வரவிருக்கும் நாட்களில் இஸ்ரேலிய - பாலஸ்தீனிய தலைவர்களைச் சந்திக்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் இஸ்ரேலின் வெளியுறவுத்துறை அமைச்சரான காபி அஷ்கெனாசியுடன் பேசினேன், அதோடு, தூதராக இருந்து எகிப்து முன்னெடுத்த போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டதை வரவேற்றேன். கூடிய விரைவில், மத்தியக் கிழக்குக்கு சென்று இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர், பிற இஸ்ரேலிய தரப்புத் தலைவர்கள், பாலஸ்தீனியத் தரப்பு தலைவர்கள் என அனைவரையும் சந்தித்துப் பேசவுள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:இஸ்ரேலுக்கு ரூ.5 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்கள் விற்க அமெரிக்கா முடிவு!