தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

’கரோனாவின் தொடக்கத்தை ஆராய சீனா ஒத்துழைப்பு தர வேண்டும்’ - அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் - கரோனா தொடக்கம்

கோவிட்-19 தொற்றின் தொடக்கத்தை ஆராய்வதற்கு சீனா முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிலிங்கன் வலியுறுத்தியுள்ளார்.

Antony Blinken
Antony Blinken

By

Published : Jun 7, 2021, 7:43 PM IST

Updated : Jun 7, 2021, 7:53 PM IST

சீனாவிலிருந்து உலக நாடுகளுக்கு கோவிட்-19 தொற்று பரவிய நிலையில், பரிசோதனை மையத்திலிருந்துதான் தொற்று பரவியது என்ற குற்றச்சாட்டு தற்போது வலுத்து வருகிறது.

இந்நிலையில், இதனைக் கண்டறிய அமெரிக்க உளவுத்துறை இது தொடர்பான ஆவணங்களைத் திரட்டி வருகிறது. மேலும், வூகானில் முதன்முதலில் பாதிப்புக்குள்ளான ஒன்பது நபர்களின் முழு மருத்துவ அறிக்கையை வெளியிட வேண்டும் என அமெரிக்காவின் பெருந்தொற்று நிபுணர் ஆன்டனி பவுச்சி சீனாவுக்கு அழுத்தம் அளித்துள்ளார்.

இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிலிங்கனும் இவ்விகாரம் குறித்து பேசியுள்ளார். ”இதுபோன்ற பெருந்தொற்று எதிர்காலத்தில் ஏற்படாத வகையில், இதன் தொடக்கம் குறித்து ஆராய அமெரிக்கா முடிவெடுத்துள்ளது. எனவே, இந்த ஆராய்ச்சிக்கு சீனா முழு ஒத்துழைப்பையும் தர வேண்டும்” என அவர் கோரியுள்ளார்.

இதையும் படிங்க:பாகிஸ்தானில் ரயிகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 40 பேர் பலி

Last Updated : Jun 7, 2021, 7:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details