அமெரிக்கா அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்டு டிரம்ப்பை எதிர்த்து ஜனநாயகக் கட்சியின் ஜோ பிடன் போட்டியிட்டார். அதில் ஜோ பிடன் வெற்றிபெற்றுள்ள நிலையில், இன்னும் இரண்டு மாதங்களில் அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ளார்.
இந்தநிலையில் ஜோ பிடன் தனது 78ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இதன்மூலம் அமெரிக்க அதிபர் வரலாற்றில், அதிக வயதில் பொறுபேற்க உள்ள முதல் அதிபர் ஜோ பிடன் என்பது குறிப்பிடத்தக்கது.