தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

விண்வெளி பயணத்தைதொடங்கிய ரிச்சர்ட் பிரான்சன்

வாஷிங்டன்: அமெரிக்காவில் யூனிட்டி 22 விண்கலம் மூலம் ரிச்சர்ட் பிரான்சன் விண்வெளிக்கு புறப்பட்டார்.

விண்வெளி பயணத்தைத் தொடங்கிய ரிச்சர்ட் பிரான்சன்
விண்வெளி பயணத்தைத் தொடங்கிய ரிச்சர்ட் பிரான்சன்

By

Published : Jul 12, 2021, 8:46 AM IST

உலகின் பல்வேறு தனியார் நிறுவனங்கள் மனிதர்களை விண்வெளிக்குச் சுற்றுலா அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த முயன்று வருகிறது.

அந்த நிறுவனங்களில் முக்கியமான நிறுவனம் விர்ஜின் கேலடிக். பிரிட்டன் கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சனுக்கு சொந்தமான விர்ஜின் கேலடிக் இதுவரை நடத்திய சோதனைகள் வெற்றிகரமாக அமைந்துள்ளன.

விண்வெளி பயணம்

இந்நிலையில், சோதனை முறையில் யூனிட்டி 22 விண்கலம் மூலம் ரிச்சர்ட் பிரான்சன் இந்திய நேரப்படி இரவு 8 மணியளவில் தனது விண்வெளி பயணத்தை தொடங்கினார்.

ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ஸ்ரீஷா பாண்ட்லா உள்பட மொத்தம் ஆறு பேர் இந்த விண்வெளி பயணத்தில் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு விண்வெளிக்கு புறப்படுவதாக இருந்தனர். மோசமான வானிலை காரணமாக காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

90 கிமீ உயரம் வரை செல்லும் விமானம்

இதையடுத்து சுமார் 90 நிமிடங்கள் தாமதமாகவே விண்வெளி பயணம் தொடங்கியது. இவர்கள் இருக்கும் விண்கலம் இரட்டை எஞ்சின் கொண்ட கேரியர் விமானம் மூலம் 50 ஆயிரம் அடி உயரத்திற்கு எடுத்துச் செல்லப்படும். அங்கிருந்து இவர்கள் இருக்கும் விண்கலம் விடுவிக்கப்படும்.

இருப்பினும், இது சோதனை விமானம் என்பதால் முழுமையாக விண்வெளிக்குச் சென்றுவிடாது, 85-90 கிமீ உயரம் வரை மட்டும் செல்லும்.

இதையும் படிங்க: திறந்தவெளியில் கண்டெடுக்கப்பட்ட இஸ்ரோவின் சேதமடைந்த பாராசூட்!

ABOUT THE AUTHOR

...view details