தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

மைக்ரோசாஃப்ட் இயக்குனர் குழுவிலிருந்து பில்கேட்ஸ் விலகல்!

நியூயார்க்: மைக்ரோசாஃப்ட் இயக்குனர் குழுவிலிருந்து பில்கேட்ஸ் விலகுவதாக அறிவித்துள்ளார். வரும் நாட்களில் அவர் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அறக்கட்டளை பணிகளில் கவனம் செலுத்துகிறார்.

Bill Gates bow out Gates steps down Microsoft Bill Gates Satya Nadella மைக்ரோசாஃப்ட் இயக்குனர் குழுவிலிருந்து பில்கேட்ஸ் விலகல்! மைக்ரோசாஃப்ட் இயக்குனர் குழு பில்கேட்ஸ் விலகல் Bill Gates steps down from Microsoft's board of directors
Bill Gates bow out Gates steps down Microsoft Bill Gates Satya Nadella மைக்ரோசாஃப்ட் இயக்குனர் குழுவிலிருந்து பில்கேட்ஸ் விலகல்! மைக்ரோசாஃப்ட் இயக்குனர் குழு பில்கேட்ஸ் விலகல் Bill Gates steps down from Microsoft's board of directors

By

Published : Mar 14, 2020, 11:54 AM IST

கணிணி என்றால் பில்கேட்ஸ். பில்கேட்ஸ் என்றால் கணிணி என்று சொல்லும் அளவிற்கு கணிணி துறையில் உயர்ந்தவர் பில்கேட்ஸ். இவர் தனது நண்பர் பால் ஆலன் என்பவருடன் இணைந்து 1975ஆம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் என்ற நிறுவனத்தை தொடங்கினார்.

இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பில்கேட்ஸ் 2000ஆவது ஆண்டு வரை தொடர்ந்தார். அந்த வகையில் பில்கேட்ஸூக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் கிட்டத்தட்ட கால்நூற்றாண்டு உறவு உள்ளது. இந்நிலையில் நிறுவனத்தின் இயக்குனர் குழுவிலிருந்து விலகுவதாக பில்கேட்ஸ் அறிவித்துள்ளார்.

இது குறித்து பில்கேட்ஸ் அளித்துள்ள விளக்கத்தில், “மைக்ரோசாஃப்ட் எனது வாழ்வுடன் கலந்தது. நிறுவனத்தின் லட்சிய இலக்குகளை எட்ட சத்யா நாதெள்ளாவுடன் தொடர்ந்து பணிபுரிவேன். நிறுவனத்தின் முன்னேற்றம் குறித்து எனக்கு நம்பிக்கை உள்ளது. மைக்ரோசாஃப்ட் மட்டுமின்றி ஹாத்தே நிறுவனத்திலிருந்தும் விலகுகிறேன்.

உலக சுகாதாரம், கல்வி மேம்பாடு, காலநிலை மாற்றம் உள்ளிட்டவற்றில் எனது கவனம் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. ஆகவே இந்தப் பணிகளில் ஈடுபட, அதிக நேரம் செலவழிக்க இந்த முடிவை எடுத்துளளேன்” என்றுள்ளார்.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் வகையில் 100 பில்லியன் அமெரிக்க டாலரை பில்கேட்ஸின் அறக்கட்டளை அண்மையில் ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மனைவிக்கு உதவியாக பாத்திரம் தூய்மைப்படுத்தும் பில்கேட்ஸ்!

ABOUT THE AUTHOR

...view details