கரோனா தடுப்பூசி குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு செய்து வந்தவர் மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ். கரோனா வைரஸ் நோயை ஆய்வகத்தில் உருவாக்கியவர் பில் கேட்ஸ் என தொடர்ந்து சர்ச்சை கருத்துகள் பரப்பப்பட்டுவந்தது. தன் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் வினோதமாக இருக்கிறது என பில் கேட்ஸ் தெரிவித்திருந்தார்.
கரோனா தடுப்பூசி போட்டு கொண்ட பில் கேட்ஸ்! - கரோனா தடுப்பூசி போட்டு கொண்ட பில் கேட்ஸ்
வாஷிங்டன்: மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டு கொண்டார்.
இந்நிலையில், கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை அவர் போட்டு கொண்டார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "65 வயதாகியுள்ளதன் பயனாக கரோனா தடுப்பூசி போட்டு கொள்ள தகுதி பெற்றுள்ளேன். இந்த வாரம் முதல் டோஸை போட்டு கொண்டது சிறப்பாக உள்ளது. கரோனா தடுப்பூசி கண்டிபிடிக்க உதவியாக இருந்த விஞ்ஞானிகள், தடுப்பூசி தன்னார்வலர்கள், அதற்து அனுமதி வழங்கியவர்களஅ, கரோனா முன்கள பணியாளர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
கரோனா பரிசோதனை, சிகிச்சை, தடுப்பூசி ஆகிய ஆய்வுகளை மேற்கொள்வதற்கு கூடுதலாக 250 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படுவதாக பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை கடந்த டிசம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. கரோனாவுக்கு எதிரான போரில் இதுவரை பில்கேட்ஸ் அறக்கட்டளை 1.75 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது.