தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

‘என்னால் காத்திருக்க முடியாது’ - பில்கேட்ஸ் மகள் - பில்கேட்ஸின் மகள் ஜெனிபர் எகிப்திய ஷோஜம்பர் காதலன் நயல் நாசருடன் நிச்சயதார்த்தம்

பிரபல தொழிலதிபர் பில்கேட்ஸின் மூத்த மகள் ஜெனிஃபர் கேட்ஸ், எகிப்து நாட்டின் குதிரைப் பந்தய வீரர் நயல் நாசருடன் திருமண நிச்சயம் செய்துகொண்டார்.

பில்கேட்ஸ் மகள்
பில்கேட்ஸ் மகள்

By

Published : Jan 31, 2020, 3:26 PM IST

உலகறிந்த தொழிலதிபர் பில்கேட்ஸ் - மெலிண்டா கேட்ஸ் தம்பதியின் மூத்த மகள் ஜெனிபர் கேட்ஸுக்கு, அவரது சக குதிரைப் பந்தய வீரரும், எகிப்து நாட்டைச் சேர்ந்தவருமான காதலன் நயல் நாசருடன் (28) நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

தனது நிச்சயதார்த்த வைர மோதிரத்தை அணிந்துகொண்டு, காதல் ஜோடிகள் இருவரும் மகிழ்ச்சியாக உள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

காதலனுடன் ஜெனிஃபர் கேட்ஸ்

அதில், “நயல் நாசர், நீங்கள் மிகவும் தனித்துவமானவர். தற்போது மிகவும் புதியவராய் உணர்கிறேன். நம்மால் பகிரப்பட்ட பலவிதமான உணர்வுகளில் இது சிறப்பான ஒன்று. இந்த இடம் அர்த்தமுள்ளதாக மாறி என்னை ஆச்சரியப்படுத்தியது. நம் வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொள்ளவும், வளரவும், சிரிக்கவும், ஒன்றாக நேசிக்கவும் என்னால் காத்திருக்க முடியவில்லை” என்று உணர்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details