வாஷிங்டன்: கடந்த 2020ஆம் ஆண்டு நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் அதிபராகவும், இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
அதிபராக அறிவிக்கப்பட்ட ஜோ பைடன் வரும் 20ஆம் தேதி பதவியேற்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவரது தேர்தல் வெற்றியை உறுதி செய்யும் சான்றிதழை வழங்கும் பணிகளை ஜன.6ஆம் தேதி காங்கிரஸ் மேற்கொண்டது.
அப்போது, நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிட்டல் கட்டடத்தின் முன் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டுவந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அதிபர் மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த சிலர் அங்கிருந்த பொருள்களை சேதப்படுத்தினர். முற்றுகைப் போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது. கலவரத்தை ஒடுக்க துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் ஒரு பெண் உள்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.
ட்ரம்ப் ஆதரவாளர்களின் ஆயுதக் கிளர்ச்சி சதி - ஜோ பைடனின் பதவியேற்பு ஒத்திகை ஒத்திவைப்பு! இந்நிலையில், இது தொடர்பாக ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (எஃப்.பி.ஐ) உயரலுவலர்கள் நடத்திய புலனாய்வு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பதவியேற்பு விழா நடைபெறுவதை சீர்குலைக்கும் வகையில் வாஷிங்டன் உள்ளிட்ட 50 மாகாண தலைநகரங்களில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் ஆயுத கிளர்ச்சியில் இறங்க திட்டமிட்டுள்ளதாக தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.
ஜனவரி 16ஆம் தேதி முதல் ஜனவரி 20ஆம் தேதிவரை ட்ரம்ப் ஆதரவாளர்கள் ஆயுத கிளர்ச்சியில் ஈடுபடலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து அந்நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அத்துடன், கேபிட்டல் கட்டடத்தில் ஜன.18ஆம் தேதி நடைபெறவிருந்த ஜோ பைடனின் பதவியேற்பு ஒத்திகை, பாதுகாப்பு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேபிட்டல் கட்டடம் அமைந்துள்ள வாஷிங்டனில் டி.சி.யில் பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க :உருமாறிய கரோனா வைரஸால் தவிக்கும் தென்னாப்பிரிக்கா!