நாட்டின் தலைவர்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை, அவர்களது செயல்பாடுகளுக்கு மக்களின் ஆதரவு ஆகியவை குறித்து பல்வேறு ஊடகங்கள் மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்துவது வழக்கம்.
தலைவர் மீது மக்கள் வைத்திருக்கும் ஆதரவு 'அப்பரூவல் ரேட்டிங்' (Approval Rating) என்று அவ்வப்போது வெளியிடப்படும். அதன்படி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீதான அப்ரூவல் ரேட்டிங் தற்போது வெளியாகியாகியுள்ளது.
இம்முறை, ஜோ பைடனின் ரேட்டிங் 50 விழுக்காட்டிற்கும் கீழ் சரிந்துள்ளது. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின் ஜோ பைடனின் அப்ரூவல் ரேட்டிங் பெரும் சரிவைச் சந்திப்பது இதுவே முதல்முறை.
ஜோ பைடன் சரிவின் பின்னணி
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படை விலகலை ஜோ பைடன் அவசர அவசரமாக மேற்கொண்டது சர்வேதச அரங்கில் அமெரிக்காவை பெரும் விமர்சனங்களுக்கு ஆளாக்கியுள்ளது.
அமெரிக்கப் படைகள் விலகத் தொடங்கிய சில நாள்களிலேயே தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதால், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கானி நாட்டை விட்டே வெளியேறும் சூழல் ஏற்பட்டது.
அத்துடன் அமெரிக்காவில் மீண்டும் கரோனா வைரஸ் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் தொற்று எண்ணிக்கை 52 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது.
எனவே இந்த இரண்டு விவகாரங்களும் ஜோ பைடன் மீதான அதிருப்தியாகவே மக்களிடம் எதிரொலித்துள்ளது என தற்போது வெளியாகியுள்ள அப்ரூவல் ரேட்டிங் தெரிவிக்கிறது.
இதையும் படிங்க:இஸ்ரேல் பிரதமரை சந்திக்கும் ஜோ பைடன்