அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக யார் களமிறங்கப்போவது என்பது குறித்த விவாதப் போட்டி அங்கு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
போட்டியாளர்கள் ஒவ்வொரு மாகாணமாகச் சென்று ஜனநாயகக் கட்சியனர் இடையே தங்களது ஆதரவைத் திரட்டி வருகின்றனர். அந்த வகையில், பல்வேறு மாகாணங்களுக்குச் சேர்த்து ஒரே நாளில் நடத்தப்படும் "சூப்பர் ட்யூஸ்டே" போட்டி நேற்று நடைபெற்றது.
இந்தப் போட்டியில், அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஜோ பிடன் அமோக வெற்றி பெற்று முதலிடத்தைப் பிடித்தார். அதேசமயம், தொடர்ந்து வெற்றி வாகை சூடிவந்தவரும் டெல்லி கலவரம், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து கடுமையான விமர்சனங்களைப் பதிவிட்டு வந்தவருமான பெர்னி சான்டர்ஸ் எதிர்பாராத விதமாகப் பல புள்ளிகள் சரிந்து இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
ரசிகர்களுடன் செல்ஃபி எடுக்கும் ஜோ பிடன் இந்த முடிவுகள் தேர்தல் களத்தை புரட்டிப்போட வாய்ப்புள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க :மீண்டும் அமெரிக்க-தலிபான் மோதல்; அமைதி ஒப்பந்தம் அம்பேல்?