தமிழ்நாடு

tamil nadu

டிச. 21ஆம் தேதி தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் ஜோ பைடன்

By

Published : Dec 19, 2020, 4:40 PM IST

அமெரிக்காவின் அடுத்த அதிபராக பொறுப்பேற்கவுள்ள ஜோ பிடன், அவரது மனைவி ஆகியோர் வரும் திங்கள்கிழமை தடுப்பூசி செலுத்திக் கொள்ள இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Joe Biden
Joe Biden

கோவிட்-19 தடுப்பூசிக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அந்நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

தற்போதைய துணை அதிபரான மைக் பென்ஸ், அவரது மனைவி, அந்நாட்டின் பிரதிநிதி சபைகளின் சபாநாயர் நான்சி பெலோசி, செனட் சபையின் தலைவர் மிட்ச் மெக்கோனெல் ஆகியோருக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் அடுத்த அதிபராக பொறுப்பேற்கவுள்ள ஜோ பிடன், அவரது மனைவி ஆகியோர் வரும் திங்கள்கிழமை தடுப்பூசி செலுத்திக் கொள்ள இருப்பதாக அவரது ஊடக செயலர் தெரிவித்துள்ளார். துணை அதிபராக பொறுப்பேற்கவுள்ள கமலா ஹாரிஸுக்கும் அடுத்த வாரத்தில் தடுப்பூசி செலுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.

உலக அளவில் அதிகளவிலான கோவிட்-19 பாதிப்பு அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளது. அங்கு தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், நாள்தோறும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கோவிட்-19 நிலவரம்: உலகளவில் 7.60 கோடியை தாண்டிய பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details