வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வரும் ஜுன் 28ஆம் தேதி, இஸ்ரேலின் குடியரசுத் தலைவர் ரியுவன் ரிவ்லின்வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசவுள்ளார்.
இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறுகையில், "குடியரசுத் தலைவர் ரிவ்லினின் வருகை அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது மட்டுமின்றி, அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான ஆழமான உறவை எடுத்துக்காட்டுகிறது" எனத் தெரிவித்தார்.