அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நான்காவது நாளாக நடைபெற்றுவருகிறது. பெரும்பான்மைக்கு 270 இடங்கள் தேவை என்ற நிலையில், பைடன் 234 இடங்களையும் ட்ரம்ப் 214 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது, பல இழுபறி மாகாணங்களில் ட்ரம்பே முன்னிலையில் இருந்தார். வாக்குப்பதிவு பாதிகூட நிறைவடையாத நிலையிலேயே, மீண்டும் வெற்றி பெற்றுவிட்டதாக ட்ரம்பே அறிவித்துக்கொண்டார்.
இந்தச் சூழலில் அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட தொடங்கியதும் நிலைமை தலைகீழாக மாறியது. பல இழுபறி மாகாணங்களில் ட்ரம்பை பின்னுக்குத் தள்ளினார் பைடன். பென்சில்வேனியா, ஜார்ஜியா, நெவாடா உள்ளிட்ட மாகணங்களில் வெற்றிக்கனியை நெருங்கிவிட்டார்.