அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி, வரும் மே 1ஆம் தேதிக்குள் அமெரிக்காவில் உள்ள 18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தச் செயல்திட்டம் உரியமுறையில் நடைமுறைப் படுத்தப்பட்டால் ஜூலை மாதத்தில் அமெரிக்கா மீண்டும் இயல்பு நிலையை அடையும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இதுவரை 20 விழுக்காடு மக்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அந்நாட்டில் 62 ஆயிரத்து 700க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மொத்தம் ஐந்து லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு மேல் கோவிட்-19 பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க:பாகிஸ்தானுக்கு 1.6 கோடி கரோனா தடுப்பூசிகள் அனுப்பும் இந்தியா