அமெரிக்கா-ஈரான் இடையேயான உறவு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மோதல் போக்கிலேயே இருந்துவருகிறது. இரு நாட்டு உறவையும் மேம்படுத்தும்விதமாக அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா இருந்தபோது 2015ஆம் ஆண்டில் இரு நாடுகளும் கூட்டுறவு ஒப்பந்தம் மேற்கொண்டன.
ஒபாமாவுக்குப்பின் டொனால்ட் ட்ரம்ப் அதிபராக வந்தவுடன் இரு நாட்டு உறவு மீண்டும் மோசமான நிலைக்குத் திரும்பியது. அணுசக்தித் திட்டங்கள், யுரேனியம் செறிவூட்டல் போன்ற நடவடிக்கையை ஈரான் தொடர்ந்து மேற்கொண்டதையடுத்து ஈரான் மீது ட்ரம்ப்கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்கத் தொடங்கினார்.
இந்நிலையில், தற்போது ஆட்சி மாற்றம் நடைபெற்றுள்ள நிலையில் அமெரிக்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன் ஈரான் உடனான உறவு குறித்து முக்கியத் தகவலைத் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான தடையை உடனடியாக நீக்கும் எண்ணம் அமெரிக்காவுக்கு இல்லை எனவும், ஈரான் தனது அணுசக்தித் திட்டங்களை நிறுத்தினால் மட்டுமே இந்தத் தடைகள் நீக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
பைடனின் வருகைக்குப்பின் இரு நாட்டு உறவும் மேம்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதைய கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:சீனாவுக்கு செக் வைக்கும் 'குவாட்' கூட்டணி!