தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் நியமனம்! - இந்தியா அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மேயர் எரிக் கார்செட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Eric Garcetti
Eric Garcetti

By

Published : Jul 10, 2021, 10:24 AM IST

வாஷிங்டன்: லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் எரிக் கார்செட்டியை இந்திய நாட்டுக்கான புதிய அமெரிக்க தூதராக நியமித்து அந்நாட்டு அதிபர் ஜோ பிடன் உத்தரவிட்டுள்ளார்.

இவர், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சர்வதேச விவகாரங்களில் முதுகலைப் பட்டம் பெற்றார். பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் குறித்து படித்துள்ளார். அரசியலில் நுழைவதற்கு முன்பு, ஆக்ஸிடெண்டல் கல்லூரி மற்றும் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் (யு.எஸ்.சி) ராஜதந்திரம் மற்றும் சர்வதேச உறவுகள் குறித்த பாடங்களைக் கற்பித்துள்ளார்.

மேலும் 2013 முதல் இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் மேயராக இருந்து வருகிறார், 12 ஆண்டுகளுக்குப் பிறகு நகர சபை உறுப்பினராக இருந்தார். மேலும், ஜோ பிடனின் பரப்புரை குழுவிலும் பணியாற்றியுள்ளார்.

இதையும் படிங்க: இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ABOUT THE AUTHOR

...view details