தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 23, 2021, 7:14 PM IST

ETV Bharat / international

கரோனாவால் உயிரிழந்த 5 அமெரிக்கர்கள் - அஞ்சலி செலுத்திய பைடன்!

வாஷிங்டன்: கரோனாவால் அமெரிக்காவில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களுக்கு அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பைடன்
பைடன்

கரோனாவால் அமெரிக்காவில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலக போரை காட்டிலும் அதிக அளவிலான உயிரிழப்பு இதனால் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில், உயிரிழந்தவர்களுக்கு அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் மெளன அஞ்சலி செலுத்தியுள்ளார். கட்சி பேதங்களை கடந்து பெருந்தொற்றுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், "வேதனைமிக்க மனதை புடைக்கும் மைல்கல்லை இன்று எட்டியுள்ளோம். கரோனாவால் மொத்தம் 5,00,071 பேர் உயிரிழந்துள்ளனர். முதல் உலக போர், இரண்டாம் உலக போர், வியட்நாம் போர் ஆகிய போர்களின் மொத்த உயிரிழப்பை காட்டிலும் ஒரே ஆண்டில் நிகழ்ந்த பெருந்தொற்றால் அதிக உயிரிழப்பு நிகழந்துள்ளது.

அதிக அளவிலான உயிரிழப்பை ஒப்பு கொள்ளும் அதே வேலையில், அவர்களையும் அவர்களின் வாழ்க்கையையும் நினைவு கொள்ள வேண்டும்" என்றார். இந்நிகழ்ச்சியில், துணை அதிபர் கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details