அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ளதை அடுத்து தேர்தல் களத்தின் முக்கிய நிகழ்வான பொது விவாதம் கடந்த (செப்.29)ஆம் தேதி நடைபெற்றது.
இதில் குடியரசுக் கட்சி சார்பில் வேட்பாளராக களமிறங்கும் தற்போதைய அதிபரான டொனால்ட் ட்ரம்ப் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனுடன் காரசாமான விவாதத்தை மேற்கொண்டார்.
இந்த விவாதத்தில் கோவிட்-19, வரி விவகாரம், சட்டம் ஒழுங்கு, உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட தலைப்புகளில் இருவரும் விவாதித்தனர். விவாதம் முடித்து அதன் கருத்துக்கணிப்புகள் அனைத்திலும் பிடனே வெற்றிபெற்றார் என முடிவுகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை, சின்னா கல்லூரி இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் மிக முக்கிய இரண்டு மாகாணங்களில் வெற்றிபெறுவார் என தகவல் வெளியாகியுள்ளது.