அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக யார் களமிறங்கப்போவது என்பது குறித்த விவாதப் போட்டி அங்கு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
போட்டியாளர்கள் ஒவ்வொரு மாகாணமாகச் சென்று ஜனநாயகக் கட்சியனரிடையே தங்களது ஆதரவைத் திரட்டி வருகின்றனர். அந்த வகையில், பல்வேறு மாகாணங்களுக்குச் சேர்த்து ஒரே நாளில் நடத்தப்படும் "சூப்பர் ட்யூஸ்டே" போட்டி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.