நியூயார்க்: மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில்கேட்ஸ் பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், "தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை புறக்கணித்துவிட்டு, அமெரிக்க அதிபர், துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் ஜோ பைடன், கமலா ஹாரிஸ் குறித்து பெருமை தெரிவித்தார்.
ஜோ பைடன், கமலா ஹாரிஸின் குழு அமெரிக்க மக்களுக்கான நல்ல கூட்டணி. அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள தொற்றுநோய்களின்போதும் பொது சுகாதார நிபுணர்களுடன் முரண்படும் அதிபர்களை மக்கள் புறக்கணித்தனர். ஆனால், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவினர் மக்களை தொற்று நோயிலிருந்து மீட்பதற்கும், அறிவியல்பூர்வமான நடவடிக்கைகளையும், மக்கள் நலனிலும் அக்கறை கொள்வர் என நம்புகிறேன். மக்களின் நலனில் அக்கறை கொள்ளாத அரசிற்கு மத்தியில் இவை எனக்கு நல்ல கூட்டணியாகத் தெரிகிறது.