உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்கள் சீக்கிய மத குருவான குரு நானக்கின் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடுவர். இந்தியாவில் குரு நானக்கின் பிறந்தநாள் குரு நானக் ஜெயந்தியாக கொண்டாடப்படும். அதன்படி நேற்று (நவ. 30) குரு நானக் ஜெயந்தி கோலகலமாக கொண்டாடப்பட்டது.
அதற்குப் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பைடன், துணை அதிபராக பதவியேற்க உள்ள கமலா ஹாரிஸ் இருவரும் குருநானக் தேவின் ஜெயந்திக்கு வாழ்த்து தெரிவித்தனர்.