தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

நான்சி பெலோசிக்கு பைடன் வாழ்த்து

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகராக மீண்டும் நான்சி பெலோசி நியமனம் செய்யப்பட்டதற்கு அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Biden congratulates Pelosi on speaker nomination
Biden congratulates Pelosi on speaker nomination

By

Published : Nov 19, 2020, 11:09 AM IST

வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகராக நான்சி பெலோசி மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன், நான்சி பலோசிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாட்டில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தவும், பொருளாதாரத்தை மீட்கவும், நாட்டை முன்னேற்றப்பாதைக்கு கொண்டு செல்லவும், தான் பெலோசியுடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளதாக பைடன் தெரிவித்தார்.

பெலோசி, தனது ஆட்சியை சிறப்பாகவும், வலிமையானதாகவும் கொண்டு செல்ல உதவுவார் எனவும் பைடன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:'அதிபர் தேர்தல் வாக்கெடுப்பில் இழுப்பறி ஏற்பட்டால்...' அமெரிக்க நாடாளுமன்றம் முடிவு!

ABOUT THE AUTHOR

...view details