தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அமெரிக்க தேர்தல்: ஆசிய அமெரிக்க மற்றும் பசிபிக் தீவுவாசிகளைக் கவர பிடன் முயற்சி! - Pacific Islanders

நம் குரல்களை சரியாக பயன்படுத்த வேண்டிய நேரமிது... அனைவரும் ஒன்றிணைந்து வாக்களித்து சிறந்த அமெரிக்காவை உருவாக்குவோம் என தெரிவித்துள்ளனர்.

Biden campaign launches
Biden campaign launches

By

Published : Nov 2, 2020, 8:16 PM IST

வாஷிங்டன்: நாளை அமெரிக்க தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆசிய அமெரிக்க மற்றும் பசிபிக் திரைப்பிரபலங்கள் ஜோ பிடனுக்கு வாக்களிக்க வலியுறுத்துவது போல் பிடன் தரப்பிலிருந்து ஒரு நிமிட வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

‘நாம் வாக்களித்தால், நாம் வெல்லலாம்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவின் இறுதியில், ஜோ பிடனை வெற்றிபெறச் செய்து வரலாற்றில் முக்கிய இடத்தை பெறுங்கள் என துணை அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் வலியுறுத்துவது போல் காட்சியமைக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில், ஆசிய அமெரிக்க பிரபலங்களான மிண்டி கலிங், லூசி லியு, சான்ரா ஓ,மார்கரேட் சோ, லோ டைமண்ட் பிலிப்ஸ், மிச்செல் வான் ஆகியோர் தோன்றி, நம் குரல்களை சரியாக பயன்படுத்த வேண்டிய நேரமிது... அனைவரும் ஒன்றிணைந்து வாக்களித்து சிறந்த அமெரிக்காவை உருவாக்குவோம் என தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details