தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அமெரிக்க அதிபர் தேர்தல்: டிவி விளம்பரச் சந்தைக்கு அடித்த லாட்டரி - குடியரசுக் கட்சி வேட்பாளாரக தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலை ஒட்டி இரு கட்சிகளும் வாரத்திற்கு சுமார் ஒரு லட்சம் விளம்பரங்கள் மேற்கொண்டுவருவதாக ஆய்வுத் தகவல் தெரிவிக்கின்றன.

television spending record
television spending record

By

Published : Oct 24, 2020, 5:34 PM IST

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான காலம் நெருங்கிவரும் நிலையில், இரு கட்சிகளும் தங்கள் இறுதிகட்ட பரப்புரையைத் தீவிரப்படுத்திவருகின்றன.

குடியரசுக் கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் களம்காண்கிறார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஜோ பிடன் இருக்கிறார். இந்நிலையில் தேர்தல் நெருங்கும் காலக்கட்டத்தில் இரு கட்சிகளும் தொலைக்காட்சி விளம்பரத்திற்கான செலவை வாரி இரைத்துள்ளன.

ஜோ பிடன் தனது பரப்புரையைத் தொடங்கிய பின்னர் சுமார் ரூ.4,300 கோடி தொகையை தொலைக்காட்சி விளம்பரத்திற்காகச் செலவு செய்துள்ளார் என தனியார் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிபர் தேர்தல் வரலாற்றில் தொலைக்கட்சி மற்றும் டிஜிட்டல் விளம்பரங்களுக்கு அதிகளவிலான தொகையை செலவிட்ட வேட்பாளராக பிடன் உருவெடுத்துள்ளார். அதேவேளை ட்ரம்ப் தரப்பும் அதற்குச் சளைக்காமல் ரூ.2,500 கோடி செலவு செய்துள்ளது.

குறிப்பாக இந்த விளம்பரங்கள் பீனிக்ஸ், அரிசோனா, சார்லோத், நார்த் கரோலினா, ஐயோவா உள்ளிட்ட மாகாணங்களைக் குறிவைத்தே வெளியிடப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:நான் அதிபரானால் அனைவருக்கும் கரோனா தடுப்புமருந்து இலவசம் - ஜோ பிடன்

ABOUT THE AUTHOR

...view details