தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

எல்லாத்துக்கும் காரணம் ட்ரம்ப்தாங்க - சரமாரி குற்றச்சாட்டு வைக்கும் பைடன்! - எல்லாத்துக்கும் காரணம் ட்ரம்ப்தாங்க

வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் நாட்டின் வரலாற்றில் பதியப்பட்ட கறுப்பு நாள்கள் என அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள ஜோ பைடன் விமர்சனம் முன்வைத்துள்ளார்.

பைடன்
பைடன்

By

Published : Jan 8, 2021, 4:49 PM IST

அமெரிக்கா நாடாளுமன்றத்தில் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் உள்நாட்டுத் தீவிரிவாதிகள் என விமர்சித்த அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள ஜோ பைடன், அதற்குக் காரணம் அதிபர் ட்ரம்ப் எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "கருத்து வேறுபாட்டைத் தெரிவிக்கவோ, போராட்டம் நடத்தவோ ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு விதிமுறைகளை மீறவில்லை. அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்தும்விதமாகவே வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

அதிபர் வெற்றிக்கான சான்றை வழங்கும்விதமாக நடத்தப்பட்ட இரு அவைகளின் கூட்டுக்குழுக் கூட்டத்தை சீர்குலைக்க முயன்ற அவர்கள் போராட்டக்காரர்கள் அல்ல. கலவர கும்பல், உள்நாட்டுத் தீவிரவாதிகள் என்றே அவர்களைக் கூற வேண்டும்.

பைடன்

அவர் அதிபராக இருந்தபோது, நாட்டின் ஜனநாயக அமைப்புகள் அனைத்தும் நேரடியாக முடக்கப்பட்டன. நம் ஜனநாயகம், அரசியலமைப்பு, சட்டம் ஆகிய அனைத்தையும் மீறி அவர் செயல்பட்டுள்ளார். தொடக்கத்திலிருந்தே, ஜனநாயக அமைப்புகள் மீது தாக்குதல் நடத்திவந்துள்ளார். நேற்று நடைபெற்றது, அந்த தாக்குதலின் தொடர்ச்சியே ஆகும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details