அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன், நாட்டில் ருத்ர தாண்டவம் ஆடி வரும் கரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர முடிவு செய்தார். இதற்காக, கரோனா டாஸ்க் ஃபோர்ஸ் என்ற பணிக்குழுவை உருவாக்கியுள்ளார். இந்தக் குழுவின் துணை தலைவராக இந்திய வம்சாவாளியான மருத்துவர் விவேக் மூர்த்தி பதவி வகிக்கிறார். இருப்பினும், கரோனா பாதிப்பு குறைந்தப்பாடில்லை. இதைக் கருத்தில் கொண்டு, கரோனா டாஸ்க் ஃபோர்ஸ் பணிக்குழுவில் மூன்று நபர்களை புதிதாக ஜோ பைடன் இணைத்துள்ளார்.
பைடனின் கரோனா டாஸ்க் ஃபோர்ஸில் இணையும் மூன்று முக்கிய நபர்கள்! - அமெரிக்கா கரோனா பாதிப்பு
வாஷிங்டன்: கரோனா பரவலை தடுத்திட, ஜோ பைடனின் கரோனா டாஸ்க் ஃபோர்ஸில் மூன்று நபர்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளனர்
இதுகுறித்து ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், " நாடு முழுவதும் கோவிட் 19 பாதிப்பு அதிகரிக்கும் சூழ்நிலையில், எனக்கு ஆலோசனை வழங்கவும் மாறுபட்ட கண்ணோட்டங்களை கூறவும் குழு தேவைப்படுகிறது. புதிதாக இணைக்கப்பட்டுள்ள ஹாப்கின்ஸ், டாக்டர் ஜிம் மற்றும் டாக்டர் மைக்கேல்ஸ் ஆகியோர் குழுவின் பணிகளை வலுப்படுத்துவதோடு மட்டுமின்றி எங்களின் COVID-19 திட்டமிடலில் சுகாதார விளைவுகளிலும், பணியாளர்களிலும் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்யும் என நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் புதிய நியமனங்கள், அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 13 மில்லியனை தாண்டியதையடுத்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.