இஸ்ரேல் நாட்டிற்கு சுமார் ஐந்தாயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை விற்க அமெரிக்கா அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையே போர் சூழல் நிலவி வரும் நிலையில் அமெரிக்கா எடுத்துள்ள இந்த முடிவு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
முன்னதாக, இரு தரப்பினரும் போரை கைவிட்டு அமைதிக்கு திரும்ப வேண்டும் என அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியிருந்தார். அதேவேளையில், இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள அனைத்து உரிமையும் உள்ளது எனவும் தெரிவித்திருந்தார்.